1100 ஆண்டு பழமை வாய்ந்த மதுரை அழகர்கோவில் கோட்டை சுவர் இடிந்தது

Subscribe to Oneindia Tamil

மதுரை: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை அழகர்கோவிலின் கோட்டைச் சுவர் இடிந்தது.

மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்கோவில் வைணவர்கள் போற்றும் 108 திவ்வியத் தலங்களில் ஒன்றாகும். இது 94 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதைச் சுற்றி 1, 100 ஆண்டுகளுக்கு முன் 3 கி மீ தூரத்திற்கு கோட்டைச் சுவர் கட்டப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மதுரையில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்தது. அழகர்கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியிலும் நல்ல மழை பெய்து வருகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால் அவ்வப்போது கோட்டைச்சுவரை செப்பனிடும் பணிகள் நடந்து வந்தன.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் கோட்டைச்சுவர் பலவீனம் அடைந்து வந்தது. இந்நிலையில் நேற்று சுமார் 60 அடி நீளத்திற்கு கோட்டைச்சுவர் இடிந்து விழுந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+