திருச்செந்தூரில் மாசித் திருவிழா துவக்கம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. வரும் 27ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையடுத்து விஸ்வரூப தீபாரதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் ஆகியவை நடந்தன.
பின்னர் வெள்ளி கொடி பட்டம் பல்லாக்கில் வைத்து வீதி உலா நடந்தது. கோவில் 2ம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது.
பின்னர் கணபதி பூஜை, காப்பு கட்டுதல், அதனை தொடர்ந்து கொடி மரத்திற்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. தர்பை புல், பட்டு வஸ்திரம், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனையும் நடந்தது.
7ம் திருவிழாவான 24ம் தேதி மலை 4 மணிக்கு சிவப்பு சாத்தி, 8ம் திருவிழாவான 25ம் தேதி வெள்ளி சப்பரத்தில் வீதியுலா வந்து சுவாமி சண்முகருக்கு பச்சை சாத்துதல் நடக்கிறது. 10ம் திருவிழாவான 27ம் தேதி அதிகாலை தேரோ்ட்டம் நடக்கிறது. 28ம் தேதி இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது.












Click it and Unblock the Notifications