துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பெருவிழா
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் மீலாத் பெருவிழா தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் என்றழைக்கப்படும் குவைத் பள்ளியில் வரும் வியாழக்கிழமை (25ம் தேதி) மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் 9.00 மணிக்கு நடைபெற உள்ளது.
ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி இத்தகவலை தெரிவித்துள்ளார்.
விழாவிற்கு ஈமான் அமைப்பின் தலைவரும், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன் தலைமை தாங்குகிறார்.
லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் இமாம் அல்ஹாஜ் எம்.ஏ. காஜா முஹம்மது ஜமாலி மக்கி மன்பஈ சிறப்புரை நிகழ்த்துகிறார்.
சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி பேராசிரியர் மௌலவி முஹம்மது அபுதாஹிர் ஆலிம் விழாப்பேருரை நிகழ்த்த இருக்கிறார்.
தேரிழந்தூர் தாஜுத்தீன் அவர்கள் பாடிய அரபி பாடலளின் ஒலிநாடாவும் வெளியிடப்பட இருக்கிறது. மேலும் மீலாத் விழாவினையொட்டி நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications