பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ரூ.2 கோடி உதவி தொகை : பயனாளிகள் 10 ஆயிரத்து 524 மாணவ, மாணவிகள்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட சீர்மரபின கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2 கோடிக்கும் அதிகமாக உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் விடுத்துள்ள அறி்க்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
தமிழக அரசு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குகிறது. நெல்லை மாவட்டத்தில் 2010-2011-ம் கல்வியாண்டில் கல்லூரி மாணவர்களுக்கு 2 கோடியே 1 லட்சத்து 84 ஆயிரத்து 387 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. அம்பை அரசு கலைக் கல்லூரி, நெல்லை அண்ணா பல்கலைக்கழகம், பாளை சித்தா கல்லூரி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மதிதா இந்துக் கல்லூரி உள்ளிட்ட 11 கல்லூரிகளுக்கு உதவித் தொகை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 ஆயிரத்து 524 மாணவ, மாணவிகள் பயன் அடைவர்.
விண்ணபித்த மாணவ, மாணவியர் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் இலவச கல்வி உதவித் தொகையை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications