நபிகள் நாயகம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா
சென்னை: சென்னையில் ஆயிஷா பதிப்பகம் சார்பாக வரலாற்றாசிரியர் இப்னு கஸீர் (ரஹ்) அரபியில் எழுதிய அல்பிதாயா வந்நிஹாயா நூலின் ஒரு பகுதி கஸஸுல் அன்பியா.
இதன் தமிழாக்கத்தின் முதல் பாகமான நபிகள் நாயகம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா வரும் 6ம் தேதி மாலை 6 மணிக்கு தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு ரஹ்மத் பதிப்பக மேலாய்வாளர் மௌலவி ஏ. முஹம்மது கான் பாஸில் பாகவி தலைமை தாங்குகிறார். சென்னை ரோஸ் பேப்பர் ஸ்டோர்ஸ் பி.எஸ். முஹம்மது பாதுஷா மற்றும் பி. ஜபருல்லா கான் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
ஆயிஷா பதிப்பக நிறுவனர் இக்பால் கான் அறிமுகவுரை நிகழ்த்துகிறார். சென்னை பல்கலைக்கழக அரபி, பார்ஸி மற்றும் உருது துறைத்தலைவர் டாக்டர் பி. நிஸார் அஹ்மத் நூலை வெளியிடுகிறார். முதல் பிரதியினை எல்.கே.எஸ். கோல்ட் ஹவுஸ் சேர்மன் எல்.கே.எஸ். சையத் அஹமது பெற்றுக் கொள்கிறார்.
சென்னை புஹாரி ஆலிம் அரபிக் கல்லூரி முதல்வர் டாக்டர் மௌலவி பி.எஸ். மஸ்வூத் ஜமாலி நூல் அறிமுகவுரை நிகழ்த்துகிறார்.
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் டாக்டர் கவிக்கோ அப்துல் ரஹ்மான், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ், டாக்டர் பேராசிரியர் அப்துல்லாஹ் ( பெரியார்தாசன் ), வேலூர் பாகியத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி பேராசிரியர் மௌலவி ஏ. முஹம்மது இல்யாஸ் ஃபாஸில் பாகவி, மௌலவி காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
ஆயிஷா பதிப்பக நிறுவனர் எம். சாதிக் பாட்சா நன்றியுரை நிகழ்த்துகிறார். ரஹ்மத் பதிப்பக மொழிபெயர்ப்பாளர் சா. யூசுப் சித்திக் மிஸ்பாஹி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகிறார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications