இயல் இசை நாடக மன்றத்தில் 'கலைஞர் திரையரங்கம்'!
சென்னை கிரீன்வேஸ் சாலையில் இயங்கும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் புதிய இலவச தியேட்டர் திறக்கப்படுகிறது.
ரூ.5 லட்சம் செலவில் தமிழக அரசால் கட்டப்பட்டுள்ள இந்த மினி தியேட்டருக்கு கலைஞர் திரையரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது.
வருகிற 20-ந்தேதி கனிமொழி எம்.பி. இந்த தியேட்டரை திறந்து வைக்கிறார்.
இந்த தியேட்டரில் 30 முதல் 40 பேர் வரை உட்கார்ந்து பார்க்கலாம். சர்வதேச தரத்தில் ஒலியமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பிரபலமான ஆங்கில, தமிழ் திரைப்படங்கள் இங்கு திரையிடப்பட உள்ளன.
இதுபற்றி இயல் இசை நாடக மன்ற செயலாளர் கவிஞர் இளையபாரதி கூறுகையில், "கலைஞர் திரையரங்கம் சர்வதேச தரத்துடன் கூடிய ஒருஆடியோ வீடியோ லைப்ரரி. பிரபலமான 1000 ஆங்கிலப்பட வீடியோக்களை சேகரித்து வைத்துள்ளோம். தமிழ் படங்களில் சிறந்த படங்களை தேர்வு செய்து வைத்துள்ளோம்.
குறிப்பாக பழைய படங்களான கண்ணகி, ஸ்ரீவள்ளி, கலைஞரின் பராசக்தி, மனோகரா, ராஜாராணி, ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள் போன்ற முக்கிய படங்களின் சி.டி.க்களை வைத்து இருக்கிறோம்.
எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், நடிகர்- நடிகைகள் போன்றோர் ஏதேனும் படத்தைப் பார்க்க விரும்பினால் அவர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்படும்.
இதற்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. இலவசமாகவே பார்க்கலாம்.
உலக சினிமாக்கள், இந்திய சினிமாக்கள், தமிழ் சினிமாக்கள், ஆவண படங்கள் என 4 வகையாக வரிசைப்படுத்தி இப்படங்களை வைத்துள்ளோம்.
அதோடு முக்கியமான இசையமைப்பாளர்களின் இசை ஆல்பங்களையும் இங்கு பார்க்கலாம். புதிய பாடகர்களின் பாடல்களை கேட்டு ரசிக்கலாம்.
முக்கிய பிரமுகர்களை சேர்த்து மூவி கிளப் ஒன்றையும் விரைவில் தொடங்க உள்ளோம்..." என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications