பெண் ஆட்டோ டிரைவரின் கற்பை விலை பேசிய சக ஆட்டோ டிரைவர்கள்
திருவனந்தபுரம்: சக ஆட்டோ டிரைவர்கள் தனது கற்புக்கு விலை பேசியதால் வெறுத்துப் போய் ஆட்டோ ஓட்டும் தொழிலையே விட்டு விட்டார் ஒரு பெண் ஆட்டோ டிரைவர்.
திருவனந்தபுரத்தில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி காந்தி பார்க்கில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முன்னாள் ஆட்டோ டிரைவரான எலிசபெத் என்பவர் உருக்கமாக பேசினார்.
அவர் கூறுகையில், நான் முதன் முதலில் ஆட்டோ தொழிலில் இறங்கியபோது ஆண் ஆட்டோ டிரைவர்கள் என்னை விரோத மனப்பான்மையோடு நோக்கினார்கள். எதிரியாக பாவித்தார்கள்.
பொது இடங்களில் வைத்து பெண் என்றும் பாராமல் வசை பாடி அவமதித்தார்கள். என் உடலையே விலை பேசினார்கள். இவையெல்லாம் என்னை அதிர வைத்தது.
அவர்களை எதிர்க்குத் துணிச்சல் இல்லாததாலும், ஆணாதிக்கத்திற்கு எதிராக போராட முடியாததாலும், மானத்திற்குப் பயந்தும் நான் தற்போது ஆட்டோ ஓட்டுவதையே விட்டு விட்டேன் என்றார் எலிசபெத்.












Click it and Unblock the Notifications