திருப்பதி கோயிலில் உகாதி உற்சவ ஆஸ்தான திருவிழா
Subscribe to Oneindia Tamil
நகரி: உகாதி பண்டிகையை ஒட்டி, திருப்பதி கோவிலில் உகாதி உற்சவ ஆஸ்தான திருவிழா நடந்தது.
திருவிழாவின் ஒரு பகுதியாக சின்ன ஜீயர் சுவாமிகள் ஏழுமலையானுக்கு 6 பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கினார்.
பின்னர் ஏழுமலையான் முன்பு கோவிலின் வரவு- செலவு கணக்குகளை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தேவஸ்தான அறங்காவலர்கள், அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
உகாதி உற்சவ விழாவை யொட்டி திருப்பதி கோவிலில் வழக்கமாக நடை பெறும் தோமாலை சேவை, அர்ச்சனை, கல்யாணி உற்சவம், ஊஞ்சல் சேவை, வசந்த உற்சவம் போன்ற சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
உகாதி விழாவையொட்டி நேற்று முதலே கோவிலில் கூட்டம் அலை மோதியது. இன்று பக்தர்கள் 3கிமீ தூரம் வரை வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications