24 மணி நேரத்தில் 485 உணவு வகை - சென்னை சமையலர் கின்னஸ் சாதனை!
சென்னை: 24 மணி நேரத்தில் 485 விதமான உணவு வகைகளை தயாரித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் சென்னையைச் சேர்ந்த சமையலர்.
சென்னையை சேர்ந்தவர் ஜேக்கப். வயது 34. சமையல் கலை பட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்றவர்.
சென்னை உட்பட பல்வேறு மெட்ரோ நகரங்களில் உள்ள ஸ்டார் ஓட்டல்களுக்கு சமையல் ஆலோசகராக உள்ளார்.
இவர், தொடர்ந்து 24 மணி நேரம் சமையல் செய்து, 485 விதமான இந்திய சைவ அசைவ உணவு பதார்த்தங்களை செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதற்காக சென்னை ரேடிஸன் ஓட்டலில் நேற்று முன்தினம் காலை, தனது முயற்சியை ஜேக்கப் தொடங்கினார்.
கின்னஸ் சாதனைக்காக இதுவரையில்லாத அளவுக்கு 485 வகையான உணவுகளை சமைத்து ஜேக்கப் அசத்தினார்.
அவர் கின்னஸ் சாதனை செய்ததை கின்னஸ் சாதனை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் லூசியா சினிகலேசி நேரில் பார்வையிட்டார்.
இதுகுறித்து ஜேக்கப் கூறுகையில், '485 உணவு வகைகளை சமைத்தேன். அதில் 150 வகைகள் அசைவம் ஆகும். இந்த சாதனையை முறியடிக்க நான் மீண்டும் முயற்சி செய்வேன்' என்றார்.
கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, ஜேக்கப்புக்கு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications