டாம் அண்ட் ஜெர்ரிக்கு வயது 70!

1940களின் ஆரம்பத்தில் அறிமுகமான இந்த கார்ட்டூன் கேரக்டர்கள் கடந்த 70 ஆண்டுகளாக உலகம் முழுக்க பெரியவர் சிறியவர் என்ற பேதமில்லாமல் அனைவர் மனதிலும் ஆட்சி செலுத்துவதே இதன் சரித்திர வெற்றிக்குச் சான்று.
இந்தத் தொடர் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, இத்தொடரை விரும்பிப் பார்ப்பவர்களில் பாதி பேர் பெரியவர்கள் என்ற சுவாரஸ்யமான தகவலைத் தெரிவிக்கிறது.
வில்லியம் ஹன்னா மற்றும் ஜோஸப் பார்பரா ஆகியோரால் உருவாக்கப்பட்ட டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் குறும்படங்கள் 7 முறை ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளன. எம்ஜிஎம் நிறுவனம்தான் இந்த படங்களின் முதல் உரிமையாளர்.
அதன் பிறகு டைம் வார்னர் நிறுவனத்துக்கு இதன் உரிமைகள் கைமாறின.
டாம் அண்ட் ஜெர்ரி இந்த 70 ஆண்டுகளில் 4 தலைமுறை இயக்குநர்களின் கைவண்ணத்தில் வெவ்வேறு பாகங்களாக வெளிவந்துள்ளது.
வில்லியம் ஹன்னாவும் ஜோஸப் பார்பெராவும் இணைந்து 114 டாம் அண்ட் ஜெர்ரி படங்களை உருவாக்கினர்.
அவர்களுக்குப் பின் ஜெனி டெய்ச் 1960 முதல் 62 வரை 26 படங்களை உருவாக்கினார்.
சக் ஜோன்ஸ் 1963 முதல் 1964 வரை 34 படங்களை உருவாக்கினார். இவையும் பெரும் புகழ் பெற்றன. பின்னர் வில்லியம் ஹன்னாவும் பார்பராவும் மீண்டும் எழுபதுகளில் இணைந்து பல புகழ்பெற்ற கார்ட்டூன்களை உருவாக்கினர். டாம் அண்ட் ஜெர்ரியை முழு நீள திரைப்படமாகவும் வெளியிட்டு வெற்றிபெற்றனர். இந்த ருவரும் முறைய 90 மற்றும் 95 வயதி வரை வாழ்ந்தனர். கடைசி காலம் வரை ஆக்டிவாக இருந்தனர். வில்லியம் ஹன்னா 2001-லும், பார்பரா 2005லும் மரணமடைந்தனர்.
டாம் அண்ட் ஜெர்ரியின் 70வது பிறந்தநாள் கடந்த மாதம் கொண்டாடப்பட்டது (பிப்ரவரி 10, 1940 டாம் அண்ட் ஜெர்ரி பிறந்த நாள்!).
இதில் டாம் போலவும் ஜெர்ரி போலவும் உடையணிந்து வந்த மாடல்கள் சமீபத்தில் பாலிவுட் ஹிட் பாடல்களுக்கு நடனமாடி மகிழ்வித்தனர்.
டாமும் ஜெர்ரியும் மேடையில் தோன்றி ஆடிய போது அங்கிருந்த ஏராளமான குழந்தைகளும் மேடைக்கு ஓடிச் சென்று அவர்களுடன் சேர்ந்து நடனமாடினார்கள்.
70வது பிறந்த நாளை முன்னிட்டு கார்ட்டூன் சேனல்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications