துபாயில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய மாநாடு
சர்வதேச மார்க்க அறிஞர்கள் மஸ்ஜித் ஹரமின் இமாம் அப்துல் ரஹ்மான் சுதைஸ், குவைத்திலிருந்து ஷேக் மிஷரி ராஸித் அல் எஃப்ஸி, எகிப்திலிருந்து டாக்டர் ஹசைன் ஹமத் ஹசன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலும், அமெரிக்காவில் இருந்து யூசுப் எஸ்டஸ், யாசிர் காதி, இங்கிலாந்திலிருந்து அப்துல் ரஹீம் கிரீன், மலேசியாவிலிருந்து ஷேக் ஹசைன் யீ, இந்தியாவிலிருந்து டாக்டர். ஜாகிர் நாயக், எம்.எம்.அக்பர், அஹ்மத் ஹமத், மாயன் குட்டி மாதர், தென் ஆப்ரிக்காவிலிருந்து ஜெய்ன் பிகா, கனடாவிலிருந்து சையத் ராகே ஆகிய அறிஞர்களும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு சொற்பொழிவாற்றினர்.
அமீரகத்திலுள்ள பல்வேறு இஸ்லாமிய வங்கிகளும், வர்த்தக நிறுவனங்களும் தங்களின் நிறுவனங்களின் பொருட்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக கடைகளை அமைத்திருந்தன.
தமிழகத்திலிருந்து அல்-ஃபஜர், இண்டர்நேஷனல் இஸ்லாமிக் ஸ்கூல் ஆகிய சர்வதேச பள்ளிகளின் விளம்பரங்கள் பொருட்காட்சியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications