மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதி ரூ.25 ஆயிரமாக உயர்வு: கருணாநிதி உத்தரவு
சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண நிதியுதவியை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2006-7ம் நிதியாண்டு முதல் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
இதுமட்டுமின்றி 2009-10ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளை மணக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம் நீட்டித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஆண்டு முதல் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவில் வழங்கப்படும் திருமண உதவித்தொகையை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதியுதவித் தொகையையும் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என கடந்த மே மாதம் 15-ம் தேதி முதல்வர் அறிவித்திருந்தார்.
இதையடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதியுதவியை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதில் ரூ.12,500 திருமண செலவிற்கு ரொக்கமாகவும், ரூ.12,500 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் திருமண நிதியுதவியைப் பெற தம்பதியரில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருக்க வேண்டும். வருமான உச்சவரம்பு மற்றும் கல்வித் தகுதி எதுவும் இத்திட்டத்திற்கு இல்லை.
சட்டப்பூர்வமான திருமண வயது அடைந்தவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் விண்ணப்பித்தால் இந்த நிதி வழங்கப்படும் என்று அதில் அறிவிக்கப்பபட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications