ஜனவரி 26-ல் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க வருடாந்திர சந்திப்பு நிக
திருச்சி : திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெறுவது வழக்கம்.
2010-11-ம் கல்வி ஆண்டு கல்லூரியின் அறுபதாம் ஆண்டு விழா வைர விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்த ஆண்டிற்கான முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 26. 01. 2011-ல் நடத்தப்படும் என கல்லூரி முதல்வர் முனைவர் ஷேக் முஹம்மது அவர்கள் தெரிவித்துள்ளார்.
நடக்கவுள்ள வைர விழாவில் 1951-ம் ஆண்டு முதல் பயின்ற முன்னாள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் முன்னாள் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வசதியாக தங்களது விடுமுறையினை அமைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
விழா மற்றும் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி குறித்த தகவல்கள் அறிய கீழ் கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம் அல்லது மின்னஞ்சல் அனுப்பலாம்.
தொடர்பு முகவரி :
ஜமால் முஹம்மது கல்லூரி
7 ரேஸ் கோர்ஸ் சாலை
காஜா நகர்
திருச்சி 620 020
மின்னஞ்சல் : [email protected]
இணையத்தளம் : www.jmc.edu


Click it and Unblock the Notifications
