துபாய் – ஏப்ரல் 16ம் தேதி தொழிலாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்
துபாய்: துபாய் இந்தியப் பெண்கள் சங்கத்தின் ஆதரவுடன் தொழிலாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் ஏப்ரல் 16ம் தேதி நடைபெறுகிறது.
துபாய் இந்திய பெண்கள் சங்கத்தின் ஆதரவுடன் குறைந்த பட்சம் ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு உதவும் நோக்குடன் எட்டாவது இலவச சிறப்பு மருத்துவ முகாம் 16.04.2010 வெள்ளிக்கிழமை காலை எட்டு மணி முதல் 12 மணி வரை நடைபெற இருக்கிறது.
நாற்பது வயதுக்கு மேட்பட்டோர் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் காலை உணவு சாப்பிடாமல் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கு முன்பு மருத்துவர் எவரிடமாவது ஆலோசனை பெற்றிருப்பின் அந்த மருத்துவ சான்றிதழுடன் வரவும்.
இம்முகாம் 2000 திர்ஹத்துக்கு குறைவான ஊதியம் பெறுபவர்களுக்காகவும், இன்சூரன்ஸ் வசதி இல்லாதவர்களுக்காகவும் பிரத்யோகமாக நடத்தப்படுகிறது.
இம்முகாமில் பங்கேற்க விரும்புவோர் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 050-1152021 அல்லது 056 -6945125 ஆகிய எண்களில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications