15 ஆண்டுகளில் மைனாரிட்டியாக உள்ள ஆஸ்திரேலியர்கள்!

மோக்ரோபிளான் ஆஸ்திரேலியா என்ற மக்கள் தொகை ஆய்வு அமைப்பு நடத்திய சர்வேயில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடியேறும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உள்நாட்டினரான ஆஸ்திரேலியர்களின் சராசரி வயதும் அதிகரித்து வருகிறது.
இளம் ஆஸ்திரேலியர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் அவர்கள் மூலமான குழந்தைப் பிறப்பும் குறையும். இதனால் 2025ம் ஆண்டில் உள்நாட்டு மக்கள் மைனாரிட்டிகளாகிவிடுவர்.
வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்க முடியாது. ஆஸ்திரேலியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மக்கள் வருகை மிகவும் அவசியம். இல்லாவிட்டால் ஆஸ்திரேலிய பொருளாதாரம் பாதிக்கப்படுவதோடு வரிகளும் மிக அதிகமாகிவிடும்.
ஆஸ்திரேலியாவில் குடியேறுவோரில் 14.2 சதவீதம் பேர் பிரிட்டனில் இருந்தும், 11.4 சதவீதம் பேர் நியூசிலாந்தில் இருந்தும், 11.2 சதவீதம் பேர் இந்தியாவிலிருந்தும், 10.5 சதவீதம் பேர் சீனாவில் இருந்தும் வருகின்றனர்.
2006ம் ஆண்டு சென்சஸ் கணக்கின்படி 40 சதவீத ஆஸ்திரேலியக் குழந்தைகளின் பெற்றோர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியர்கள் உள்ளிட்ட ஆசியர்கள் மீது தாக்குதல்கள் நடத்தி வரும் ஒரு சில நிறவெறி ஆஸ்திரேலியர்கள் மத்தியில் இந்த ஆய்வறிக்கை பூகம்பத்தைக் கிளப்பும் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications