குன்னூர் - மேட்டுப்பாளையம் ரயில் மீண்டும் இயக்கம் !
குன்னூர்: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குன்னூர் - மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கியது.
நீலகிரியில் கடந்தாண்டு நவம்பர் 7 ம் தேதி துவங்கி 10 ம் தேதி வரை வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாக ஊட்டி - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, ரயில் பாலங்கள் சேதம் அடைந்தது.
இதனையடுத்து, ரயில் பாதை சீரமைப்புப் பணி நிறைவு பெற்று, கடந்த ஜனவரி 5 ம் தேதி குன்னூர் - ஊட்டி இடையே ரயில் போக்குவரத்து துவங்கியது.
இந்த நிலையில், மேட்டுப்பாளையம் - குன்னூர் ரயில் பாதை சீரமைப்புப் பணி நிறைவு பெற்றதை அடுத்து ரயில் போக்கு வரத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிருஷன் துவக்கி வைத்தார்.
தற்போது கோடை காலம் என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பலர் ஊட்டி , குன்னூருக்கு சுற்றுலா வந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் அவர்கள் மலை ரயில் மூலம் இயற்கை அழகை பார்த்துக் கொண்டே செல்ல மலை ரயில் போக்கு வரத்து துவக்கப்பட்டதன் மூலம் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications