கன மழையால் ஊட்டி மலை ரயில் சேவை பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
ஊட்டி: மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் கன மழை பெய்ததால், ஊட்டி மலை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் நேற்று மாலை முதல் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தண்டவாளத்தில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்தைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை 7.15 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் ஒரு மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றது.
சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது.
மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சாய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் இருவர் உயிர் இழந்தனர்.












Click it and Unblock the Notifications