சென்னை வழியே புவனேஸ்வர்-ராமேஸ்வரம் புதிய ரயில்
சென்னை: ஒரிஸ்ஸா மாநிலம் புவனேஸ்வர்- ராமேஸ்வரம் இடையே சென்னை வழியாக புதிய வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த ரயில் (எண்-8496) வரும் 21ம் தேதி புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரத்துக்கும், 23ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து புவனேஸ்வருக்கும் (எண்-8495) அறிமுகப்படுத்தப்படுகிறது.
புவனேஸ்வரில் இருந்து வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும். அங்கிருந்து 9.25 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் இரவு 11.55 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அன்று இரவு 10.10 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும். 10.30 மணிக்கு அங்கிருந்து புறப்படும் ரயில் மறுநாள் மாலை 6.40 மணிக்கு புவனேஸ்வரை சென்றடையும்.
இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று (செவ்வாய்கிழமை) காலை முதல் தொடங்குகிறது.












Click it and Unblock the Notifications