பந்தபுளி கோயிலில் போலீஸ் பாதுகாப்புடன் பொங்கலிட்டு வழிபாடு
சங்கரன்கோவில்: பந்தபுளி கோயிலில் இன்று திட்டமிட்டபடி தலித் சமுதாய மக்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொங்கலிட்டு வழிப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பந்தபுளி கண்ணநல்லூர் மாரியம்மன் கோவில் பிரச்சனை தொடர்பாக இரு பிரிவினர் இடையே வழக்கு நடந்து வருகிறது.
இரு தரப்பினரிடமும் மாவட்ட நிர்வாகம் பலகட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவி்ல்லை. இதனால் 2 வருடங்களுக்கு முன் கோயில் சீல் வைக்கப்பட்டது.
இதன்பின்னர் இரு பிரிவினரும் தங்களது ஊருக்கு அருகில் உள்ள வெவ்வெறு மலைகளில் ஏறி தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்தனர். தொடர்ந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 24-12-2008 அன்று மாவட்ட கலெக்டர் தலைமையில் கோயில் பூட்டு உடைக்கப்பட்டு தலித் பிரிவை சேர்ந்த மக்கள் தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் தலித் மக்கள் கோயிலில் பொங்கல் வைத்து விழா நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டனர்.
இது தொடர்பாக 13, 19ம் தேதிகளில் எஸ்பி, கலெக்டர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் ஒரு தரப்பை சேரந்தவர்கள் பொங்கல் வைத்து விழா நடத்த எதிர்ப்பு தெரிவித்ததுடன் கோர்ட் தீர்ப்பு வரும் வரை எந்த நிகழ்ச்சியும் நடத்த கூடாது என்றனர்.
ஆனால், மாவட்ட நிர்வாகத்தினர் இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை தாழ்த்தப்பட்ட பிரிவினர் பொங்கிலிட்டு விழா நடத்த வாய்மொழி உத்தரவு வழங்கினர். இதையடுத்து மற்ற 7 சமுதாயத்தினரும் 23ம் தேதி ஊரை காலி செய்து விட்டு 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எட்டுசேரி மலையில் குடியேறினர்.
இந்நிலையில் இன்று காலை அறிவித்தப்படி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா 8 மணிக்கு துவங்கியது. இதையொட்டி டிஐஜி சண்முகராஜேஸ்வரன், எஸ்பி ஆஸ்ரா கர்க் ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
பொங்கல் விழா நடத்த தலித் மக்களை போலீசார் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். பின்னர் கோயில் முன்பு 41 பானைகள் வைக்கப்பட்டு பொங்கலிடப்பட்டது. 3 ஆடுகள் வெட்டப்பட்டன.
மிக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விழா அமைதியாக நடந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications