தமிழறிஞர்கள், மரபுரிமையாளர்களுக்கு ஆயுட்கால உதவித் தொகை-தமிழக அரசு உத்தரவு
மதுரை: தமிழறிஞர்கள் மற்றும் தமிழறிஞர்களின் மரபுரிமையாளர்கள் உள்பட 249 பேருக்கு ஆயுட்கால உதவித் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக உயர் நிலைக் குழுக் கூட்டம் உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
இதில் எல்லைக்காவலர்கள் 23 பேர், எல்லைக்காவலர்களின் மரபுரிமையாளர்கள் 15 பேர், தமிழறிஞர்கள் 64 பேர், தமிழறிஞர்களின் மரபுரிமையாளர்கள் 147 பேர் என மொத்தம் 249 பேருக்கு உதவித் தொகை வழங்கக் அந்த குழு பரிந்துரை செய்துள்ளது.
எல்லைக் காவலர்களுக்கு ரூ 4,000, எல்லைக் காவலர்களின் மரபுரிமையாளர்களுக்கு ரூ 2,000, தமிழறிஞர்களுக்கு ரூ 3,000, தமிழறிஞர்களின் மரபுரிமையாளர்களுக்கு ரூ 1,500 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 1-ம் தேதி முதல் இத்தொகை வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஏற்கெனவே இந்த திட்டத்தின் கீழ் எல்லைக் காவலர்கள் 334 பேர், எல்லைக் காவலர்களின் மரபுரிமையாளர்கள் 166 பேர், தமிழறிஞர்கள் 999 பேர், தமிழறிஞர்களின் மரபுரிமையாளர்கள் 528 பேர் என மொத்தம் 2027 பேர் பயனடைந்து வருகின்றனர்.
இனி வரும் காலத்தில் 249 பேர்களையும் சேர்த்து மொத்தம் 2,276 பேர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications