சாதாரண குடுவையை சக்தி வாய்ந்தது என கூறி ரூ.10 லட்சத்திற்கு விற்ற இருவர் கைது
திருவனந்தபுரம்: சாதாரண குடுவையை சக்தி வாய்ந்தது என்று கூறி ரூ. 10 லட்சத்திற்கு விற்ற இரு மோசடிப் பேர்வழிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் புன்னம்குளம் பகுதியை சேர்ந்தவர் ரஹீம். இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக துபாயில் வேலை செய்து வி்ட்டு ஊர் திரும்பினார். இவருடைய நண்பர் ஜெயபிரகாஷ்.
திருச்சூரில் ஒருவரிடம் அதிர்ஷ்ட கண்ணாடி குடுவை இருப்பதாகவும், அதை வாங்கி ஓராண்டு வீட்டில் வைத்தால் செல்வம் கொழிக்கும் என்றும் ரஹீமிடம் ஜெயபிரகாஷ் கூறினார். அதை நம்பிய ரஹீமை அவர் திருச்சூருக்கு அழைத்து சென்றார். அங்கு மோகனம் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார்.
காலி கண்ணாடி குடுவையி்ல் தண்ணீரை கொதிக்க வைக்கும் ரசாயன பொடியை மோகனம் ஏற்கனவே போட்டு வைத்திருந்தார். அதில் தண்ணீரை ஊற்றியதும் தண்ணீர் கொதிக்க தொடங்கியது. இதை பார்த்த ரஹீம் அதை சக்தி வாய்ந்த குடுவை என நம்பி ரூ. 10 லட்சம் கொடுத்து 2 குடுவைகளை வாங்கினார். குடுவையை வீட்டில் வைத்து பலமாதங்கள் ஆகியும் எந்த மாற்றமும் இல்லை.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் திருச்சூரில் உள்ள ஒரு கடையில் அதே போன்று குடுவைகள் இருப்பதை ரஹீம் கண்டார். விசாரித்தபோது அவை வெறும் அலங்கார குடுவை என தெரிந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரஹீம் போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் மாறு வேடத்தில் மோகனம் வீட்டுக்கு சென்று குடுவையை வாங்குவது போல் நடித்தனர். அதில் அவர்களின் மோசடி அம்பலமானது. இதையடுத்து மோகனத்தையும், ஜெயபிரகாஷையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications