குவைத்தில் நவ. 12-ல் புனித அரஃபா நாள் சிறப்பு நிகழ்ச்சி: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு
குவைத்: வரும் 12-ம் தேதி 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' புனித அரஃபா நாள் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள்து.
புனித அரஃபா நாள் வருவதையொட்டி குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் வரும் 12-ம் தேதி புனித அரஃபா நாள் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள்து. இந்நிகழ்ச்சி இரவு 7 மணிக்குத் துவங்குகிறது.
குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீரின் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெறும் இது குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (KPTC பேருந்து நிலையம் / லிபரேஷன் டவர் அருகில், சூக்குல் வதனிய்யா எதிரில் உள்ள)' பள்ளிவாசலில் நடக்கின்றது.
சங்கத்தின் தலைவர் மவ்லவீ அஷ்ஷைக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு உறுப்பினர் மவ்லவீ காரீ அஷ்ஷைஃக் எச்.எம். அப்துர் ரஹ்மான் மழாஹிரி ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
அவர்கள் புனித அரஃபா நாளின் சிறப்பு, அந்நாளில் மேற்கொள்ள வேண்டிய சிறப்பு வழிபாடுகள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை, தியாகத்தின் சிறப்புகள், இப்ராஹீம் (அலை) அவர்கள் மற்றம் அவர்களின் குடும்பத்தினரின் வரலாறு உள்ளிட்ட தலைப்புகளில் சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.
இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு பயன் பெறுமாறு சங்க நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். பெண்களுக்கு தனியிட வசதி உண்டு. மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சி குறித்த செய்திகளுக்கும், சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com என்ற இணையதளத்தை பார்வையிடலாம். தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை [email protected]/ [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தில் தங்களை இணைத்துக்கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications