சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை தொடங்க கேரள வனத்துறை எதிர்ப்பு
கொல்லம்: சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவையை மேற்கொள்ள கேரள வனத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அவர்களின் வசதிக்காக கொச்சியில் இருந்து சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சர்வீஸ் துவங்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு தீர்மானித்துள்ளது. இதற்காக பம்பை அருகே உள்ள நிலக்கல் பகுதியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆண்டு மண்டல சீசன் முதல் ஹெலிகாப்டர் சர்வீசை தொடங்க முடிவு எடுக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் சபரிமலையில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க கேரள வனத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வனத்துறையின் உரிய அனுமதி இல்லாமல் ஹெலிகாப்டர் சர்வீ்ஸ் தொடங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆணையருக்கு வனத்துறை கடிதம் எழுதியுள்ளது.
நிலக்கல் பகுதியில் ஹெலிகாப்டர் தளத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் இப்போதும் வனத்துறையிடம் தான் இருக்கிறது. எனவே அந்த இடத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க கூடாது என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications