ரியாத்தில் மாபெரும் ரத்ததான முகாம்
ரத்ததானம் செய்து உயிர்காப்பதில் தொடர்ந்து பல வருடங்களாக தமிழகத்தில் முதலிடத்தில் இருந்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், 46 கேடயங்களையும், பாராட்டுக்களையும் கடந்த வாரம் பெற்றது. இது தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இந்த இரத்ததான சேவையை செய்து வருகிறது.
சவுதி அரேபியாவில் ஒரே நாளில் அதிகமானோர் இரத்தானம் செய்ததில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் சார்பாக 10வது ரத்ததான முகாம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.
ரியாத் மாநகரிலுள்ள கிங் பஹத் மெடிக்கல் சிட்டியில் நடைபெற்ற இந்த முகாமில் 325க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு துவங்கிய இம்முகாமில் தமிழர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, சட்டீஸ்கர், மஹாராஷ்டிரா, கேரளா போன்ற பிற மாநில சகோதர, சகோதரிகளும் பாகிஸ்தான், பங்களாதேஷ், சவுதி அரேபியா, ஏமன் மற்றும் இலங்கை நாட்டவர்களும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
பெண்கள் உட்பட 302 பேர் தங்கள் பெயரை பதிவு செய்த போதும் 277 பேரிடம் மட்டுமே இரத்ததானம் பெறப்பட்டது. இந்த முகாமில் வழங்கப்பட்ட ரத்தம், உலகின் பலநாடுகளில் இருந்து ஹஜ் செய்வதற்காக மக்காவிற்கு வருபவர்களில் தேவைப்படுவோர்களுக்கு வழங்குவதற்காக மக்கா, மதீனா நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படவிருக்கிறது. இந்த தகவலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட இந்த முகாம், ரியாத் மண்டலம் நடத்திய மிகப்பெரிய முகாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்













Click it and Unblock the Notifications