சென்னையில் ஈமான் அமைப்பின் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி
சென்னை: சென்னையில் இந்தியன் முஸ்லிம் அசோசியேஷன் ( ஈமான் - துபாய் ) சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி, ஈமான் கல்வி உதவித் தொகை மூலம் பயின்ற மாணவர்கள் சந்திப்பு மற்றும் மாணவர்கள் கலந்தாய்வு நிகழ்ச்சி சென்னை எக்மோர் ஹோட்டல் மரினா டவர், கம்பர்ட் இன்னில் கடந்த சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குற்றாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தலைமை தாங்கினார். மாணவி ஷாபிரா பர்வின் இறை வசனங்களை ஓதினார்.
அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி அவர்கள் தனது தலைமையுரையில் அமீரகத்தில் பணி புரிந்து கொண்டே ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் முயற்சியினால் கல்வி உதவி நிதி திரட்டப்பட்டு வழங்கப்படுகிறது. இத்தகைய சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக துஆச் செய்திட கேட்டுக் கொண்டார்.
ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்புச் செயலாளர் திருப்பனந்தாள் அல்ஹாஜ் ஏ.முஹம்மது தாஹா அவர்கள் வரவேற்புரை மற்றும் ஈமான் அமைப்பு குறித்த அறிமுகவுரையினை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் ஈமான் அமைப்பு இத்தகைய கல்வி உதவி நிதி வழங்குவதற்கு பக்கபலமாக இருக்கக்கூடிய ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன், ஈமான் அமைப்பின் கல்விக் குழுத்தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா உள்ளிட்ட ஈமான் அமைப்பின் அனைத்து நிர்வாகிகளின் பணிகளை நினைவு கூர்ந்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்களில் ஒருவரான வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் தனது உரையில் கல்வி விழிப்புணர்வு குறித்து பேசினார். மேலும், ஈமான் கல்வி உதவித் தொகை மூலம் பயிலும் மாணவர்களாகிய நீங்கள் எதிர்காலத்தில் வசதியற்ற மாணவர்களை படிக்க வைக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது என்றார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில ஆலிம் அணி அமைப்பாளர் மவ்லவி எச். ஹாமித் பக்ரீ மன்பஈ அவர்கள் தனது துபாய் பயணத்தின் போது ஈமான் அமைப்பின் சார்பில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்தும், ஈமான் அமைப்பின் பணிகள் குறித்தும் பாராட்டினார்.
ஈமான் அமைப்பின் கல்வி உதவி மூலம் பயின்று வரும் மாணாக்கர்களுக்கு கல்வி உதவித் தொகைகளை ஈமான் நிர்வாகிகள் வழங்கினர்.
சென்னை பீஸ் அமைப்பின் சலாஹுத்தீன், லால்பேட்டை இமாம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஈமான் அமைப்பின் கல்விச் செயலாளர் மதுக்கூர் ஹிதாயத்துல்லா ( 89031050401 ) நிகழ்வினை தொகுத்து வழங்கி நன்றியுரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் முஹம்மது முஸ்லிம், ஆடிட்டர் ஜாஹிர் உசேன், இஸ்மாயில் ஹாஜியார், பைசல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டு ஈமான் அமைப்பின் கல்விச் சேவையினைப் பாராட்டினர்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது












Click it and Unblock the Notifications