திருப்பதி கோவில் ஒரு நாள் உண்டியல் வருமானம் ரூ.1.69 கோடி: அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் 15 மணி நேரம் காத்திருந்து தான் சாமியை தரிசிக்க வேண்டியுள்ளது.
புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்தியா முழுவதும் இருந்து சாமியை தரிசிக்க வந்த வண்ணம் உள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால் பிள்ளை குட்டிகளுடன் தமிழக மக்கள் திரளாக வருகின்றனர்.
இதனால் கடந்த 2 வார காலமாக கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். திருப்பதியில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் நிரம்பிவிட்டன. இதையடுத்து மக்கள் பூங்காக்களிலும், சாலை ஓரங்களிலும் தூங்குகின்றனர்.
மேலும், பக்தர்களை வைகுண்டம் 2-வது கியு காம்ப்ளக்சில் தங்க வைத்து இலவச தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். எனினும், கூட்ட மிகுதியால் சுமார் 3 கி. மீ. தூரத்திற்கு வரிசை நிற்கிறது. இதனால் குறைந்தது 15 மணி நேரம் காத்திருந்தால் தான் சாமியை இலவசமாக தரிசிக்க முடிகிறது. சீக்கிரம் தரிசனம் செய்பவர்கள் குறைந்தது 3 மணி நேரமாவது காத்திருக்க வேண்டியுள்ளது.
தரிசனம் இப்படியென்று இலவசமாக முடி செலுத்தச் செல்வோர் 3 மணி நேரம் காத்திருந்தால் தான் முடி காணிக்கை அளிக்க முடிகிறது. கூட்டம் அதிகமாக இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்து.
கூட்டத்திற்கு ஏற்றவாறு உண்டியலும் வேகமாக நிரம்புகிறது. கடந்த சனிக்கிழமை மட்டும் உண்டியல் வருமானம் ரூ.1 கோடியே 69 லட்சத்தை தொட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications