ஆடி அமாவாசை: கரையார், ஏரலில் பக்தர்கள் தர்ப்பணம்
வி.கே.புரம்: ஆடி அமாவாசையையொட்டி கரையார், ஏரலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தாமிரபரணி நதிக்கரையில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
பாபநாசம் கரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசைத் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 2ம் தேதி கால்நட்டுடன் தொடங்கியது. தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தன.
ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இன்று ஆடி அமாவாசை என்பதால் பாபநாசத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு எள்ளும், நீரும் இறைத்து தர்ப்பணம் செய்தனர். எள்ளும், நீரும் இறைப்பதால் அவை தங்களது முன்னோர்களுக்கு உணவாகச் சென்று அவர்கள் அங்கிருந்து ஆசிர்வாதம் செய்வார்கள் என்பது ஐதீகம். மேலும் பாபநாசம் தாமிரபரணி நதிக்கரையில் இந்த தர்ப்பணம் செய்வதால் பாவங்கள் நீங்கி மோட்சம் பிறக்கும் என்பதும் அவர்களது நம்பிக்கை.
இன்று அதிகாலை 4 மணி அளவில் பாபநாசம் சிவன் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதே போல் பாபநாசம் அணை பகுதியில் உள்ள பாணதீர்த்த அருவி, குற்றாலம் மெயின் அருவி, நெல்லை குறுக்கு துறை தாமிரபரணி ஆறு மற்றும் திருச்செந்தூர் கடலில் ஏராளமனோர் முன்னோ்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications