செலவாளி மிஷல் ஒபாமா-அமெரிக்கர்கள் அதிருப்தி

அமெரிக்கப் பொருளாதாரம் அந்தா, இந்தா என்று தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. வேலைவாய்ப்புகள் இல்லாமல் அமெரிக்கர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் பெரும் சிக்கலில் இருக்கிறார் அதிபர் ஒபாமா. இந்த நிலையில் மிஷல் ஒபாமா செய்து வரும் ஆடம்பர செலவுகளால் அமெரிக்கர்களிடையே கடும் அதிருப்தி அலை வீசத் தொடங்கியுள்ளது.
விடுமுறைக்காக ஸ்பெயின் சென்றார் மிஷல். தனியாக இல்லை, 40 தோழர், தோழியருடன். மிஷலின் இந்த பயணத்தால், ஒரு நாளைக்கு குறைந்தது 80 ஆயிரம் டாலர்களாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மிஷலின் இந்த ஆடம்பர செலவுப் பயணத்தால் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்கர்கள் அவரை விளாசித் தள்ள ஆரம்பித்துள்ளனர். ஒரு அமெரிக்கர் தனது பிளாக்கில், மிஷலை மேரி ஆன்டாய்னட்டுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார்.
அந்தக்காலத்து பிரெஞ்சு மகாராணிதான் மேரி. மிக மிக ஆடம்பரமானவர். கடைசியில் அவரை தலையைத் துண்டித்துப் படு கொலை செய்தனர். அந்த அளவுக்கு மக்களின் வெறுப்பை சம்பாதித்தவர் ஆஸ்திரியாவில் பிறந்து பிரெஞ்சு மகாராணியான மேரி. அவருடன் தற்போது மிஷலை ஒப்பிட்டுள்ளதால் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
ஸ்பெயினும் கூட மிஷலை விமர்சித்து பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. இதற்குக் காரணம், மிஷல் தனது மகள்களுடன் நீச்சலடித்து மகிழ்ச்சியாக பொழுதுபோக்குவதற்கு வசதியாக, மார்பெல்லாவில் உள்ள கடற்கரைப் பகுதியை பொதுமக்கள் பயன்படுத்த சிறிது நேரம் தடை விதித்தனர். இதுவே ஸ்பெயினும், மிஷலுக்கு எதிராக குரல்கள் கிளம்பக் காரணம்.
மிஷலின் இந்த ஸ்பெயின் பயணத்தால் அதிபர் பராக் ஒபாமா தனது பிறந்த நாளை தனியாக கொண்டாட நேரிட்டதாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications