லண்டன் ஸ்ரீமுருகன் கோவில் தேர் திருவிழா
Subscribe to Oneindia Tamil
லண்டன்: லண்டன் ஸ்ரீமுருகன் கோயில் தேர் திருவிழா ஆடி 23ம் (ஆகஸ்ட் 8) தேதியன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் பிரிட்டனிலிருந்து மட்டுமல்லாமல், ஐரோப்பா முழுவதிலுமிருந்து பக்தர்கள் பெரும் திரளாக திரண்டு வந்து கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கிழக்கு லண்டனின் முக்கிய வீதிகள் வழியே கோயிலின் தலைமை அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, உள்ளூர் நாதஸ்வர வித்துவான்கள் நாதஸ்வரம் இசைக்க இந்த தேரோட்டம் நடைபெற்றது.
விழா நாளன்று முருக பெருமானுக்கு பல வித அபிஷேகங்கள் மிக சிறப்பாக பண்ணி பூஜைகள் நடந்தன. விழாவின் இறுதியில் பக்தர்களுக்கு பிரசாதம் கோவில் நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டது.













Click it and Unblock the Notifications