துபாய் ஈமான் அமைப்பு நடத்திய மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி
துபாய்: கடந்த 8-ம் தேதி துபாயில் உள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் புனித மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.
இதற்கு ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் கூத்தாநல்லூர் அஹமது முஹைதீன் தலைமை தாங்கினார். ஹாபிஸ் முஹம்மது பஷீர் இறை வசனங்களை ஓதினார். பொதுச்செயலாளர் குற்றாலம் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மௌலவி பி.கே. என்.அப்துல் காதிர் ஆலிம் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். அவர் தனது உரையில் மிஃராஜின் போது ஐங்காலத் தொழுகை கட்டாயமாக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். மேலும் தொழுகையினை முழுமையாக கடைப்பிடிப்பதன் மூலமே வெற்றி பெற முடியும் என்றார்.
இதை தொடர்ந்து முஹிப்புல் உலமா கீழக்கரை முஹம்மது மஃரூப், லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மௌலவி காஜா முஹம்மது ஜமாலி மக்கி மன்பஈ உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர்.
சிறப்புரைகளுக்குப் பின் தொழுகை, தவ்பா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியினை விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் தொகுத்து வழங்கினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications