கூகுள் சர்ச்: அதிகம் தேடப்பட் தொழிலதிபர்கள் விஜய், சித்தார்த் மல்லையா

கூகுளில் அதிகம் தேடப்பட்ட தொழிலதிபர்கள் இவர்கள்தானாம். 2010ம் ஆண்டு கூகுள் சர்ச் தளத்தில் அதிகம் தேடப்பட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாதான்.
அடுத்த இடத்தைப் பிடித்திருப்பவர் அவரது மகன் சித்தார்த் மல்லையா. இவருக்கும், நடிகை தீபிகாவுக்கும் இடையே காதல் இருப்பதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து சித்தார்த்தும் நாடறிந்த பிரபலமாகி விட்டார். மேலும் ஐபிஎல் போட்டியின்போது இவரும், தீபிகாவும் அருகருகே நின்று 'வதந்தி வாய்களை' நிரப்பி வந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
அதற்குப் பிறகுதான் அம்பானிகள் வருகின்றனர். 3வது இடத்தை முகேஷின் மனைவி நீதா அம்பானி பெற்றுள்ளார். நான்காவது இடத்தில் முகேஷும், 5வது இடத்தில் தம்பி அனில் அம்பானியம் உள்ளனர்.
ரத்தன் டாடாவையும் நிறையப் பேர் தேடியுள்ளனர். ஆனால் நீரா ராடியா டேப் விவகாரத்தில் ரத்தன் பெயர் அடிபட்டதால் அடித்துப் பிடித்து இவரையும் தேடியுள்ளனர். ரத்தனை நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர்6ம் தேதி வரை அதிக அளவிலானோர் தேடியுள்ளனர்.
பிற பிரபலங்கள் வரிசையில் அதிகம் தேடப்பட்டவர் காத்ரீனா கைப்தான். சச்சின் டெண்டுல்கரையும் கூட இதில் பின்னுக்குத் தள்ளியுள்ளார் காத்ரீனா. இவரைத்தான் அதிக அளவிலானோர் வலையுலகில் தேடிப் பார்த்துள்ளனர். யாஹூவிலும் கூட காத்ரீனாதான் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
யாஹூ சர்ச் தளத்தில், முக்கியத் தலைப்புச் செய்தியாக, அயோத்தி பிரச்சினையைதான் அதன் வாடிக்கையாளர்கள் பெருமளவில் தேடியுள்ளனர். அதேசமயம், கூகுள் மற்றும் யாஹூவில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை ஐபோன்.
யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ சச்சின் டெண்டுல்கர் குவாலியர் ஒரு நாள் போட்டியில் போட்ட இரட்டை சதமாகும். அடுத்த இடம் மைக்கேல் ஜாக்சனுக்கும், 3வது ஐபிஎல்3 போட்டிகளுக்கும் கிடைத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications