பத்திரிக்கைகள் நடுநிலையோடு செய்திகளை வெளியிட வேண்டும்-அமைச்சர் அந்தோணி கோரிக்கை
திருவனந்தபுரம்: பத்திரிக்கைகள் நடுநிலயோடு செய்திகளை வெளியிட வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் பத்திரிக்கையாளர் சங்கத்தின் 48-வது மாநில மாநாட்டை ஏ.கே. அந்தோணி நேற்று துவங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது,
பத்திரிக்கையாளர்களின் சிரமங்களை அறிவேன். குறைந்த சம்பளம், நிச்சயமற்ற வேலை போன்ற பிரச்சனைகள் உள்ளன. பத்திரிக்கைகள் மற்றும் செய்தி நிறுவன ஊழியர்களுக்கான ஊதியக் குழு அறிக்கை விரைவில் சமர்பிக்க நடவடிக்கை எடுப்பேன்.
நீதித்துறையின் மீதும், ஜனநாயகத்தி்ன் 4-வது தூணாக கருதப்படும் பத்திரிக்கைகளின் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஊடகத் துறையின் அடிப்படைக் கொள்கைகளான நடுநிலைமை, நேர்மை, குறிக்கோள் ஆகியவற்றின் அடிப்படையில் பத்திரிக்கையாளர்கள் செயல்பட வேண்டும். பத்திரிக்கைகள் நடுநிலையோடு பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும்.
செய்தியின் உண்மையை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தை வலுபடுத்தும் கடமையும், பொறுப்பும் பத்திரிக்கைகளுக்கும், தொலைகாட்சிகளுக்கும் உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications