துபாயில் ஈமான் அமைப்பு வழங்கி வரும் தமிழகத்து நோன்புக் கஞ்சி
இந்நிகழ்ச்சி குறித்து ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குற்றாலம் ஏ. லியாக்கத் அலி கூறியதாவது:
ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன், கல்விக் குழுத் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா உள்ளிட்டோரின் வழிகாட்டுதல் படி கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நோன்புக் கஞ்சி வழங்கும் பணி சிறப்புற நடைபெற்று வருகிறது.
ஈமான் மக்கள் தொடர்பு செயலாளர் ஏ. முஹம்மது தாஹாவின் மேற்பார்வையில் நோன்பாளிகளுக்கு நோன்புக் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. தினமும் சுமார் 3000க்கும் மேற்பட்டோர் இதன் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
தமிழக மக்கள் மட்டுமல்லாது, இந்தியாவின் பிறபகுதிகளைச் சேர்ந்தவர்கள், இலங்கை, வங்காள தேசம், பாகிஸ்தான், சூடான் உள்ளிட்ட பல்வேறு நாட்டவரும், அமீரக மக்களும் தமிழகத்து நோன்புக் கஞ்சியினை அருந்தி நோன்பு துறக்கின்றனர். நோன்புக் கஞ்சியுடன் சமோசா, வடை, பழம், பேரிட்சை, தண்ணீர் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.
ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் அனைவரது முழு ஒத்துழைப்போடு இப்பணி சிறப்புற நடைபெற்று வருகிறது என்று அவர் கூறினார்.













Click it and Unblock the Notifications