துபாயில் நவ. 26ல் சின்னத்திரை கொண்டாட்டம்: ஐக்கிய அரபு அமீரகத் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத் தமிழ்ச்சங்கம் வரும் 26-ம் தேதி சின்னத்திரை கொண்டாட்டம் என்னும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
நிதி திரட்டும் விழா:
வரும் 26-ம் தேதி மாலை 6 மணிக்கு சின்னத்திரை நட்சத்திரங்களின் அணிவகுப்பான 'சின்னத்திரை கொண்டாட்டம்" நடக்கிறது. சன் டிவி, விஜய் டிவி மற்றும் கலைஞர் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பார்வையாளர்களை மகிழ்விக்க இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி சார்ஜா புட்பால் கிளப்பின் எதிர்ப்புறம் இருக்கும் அல் மதீனா கிரிக்கெட் பயிற்சி கூடத்தில் நடைபெறுகிறது.
இதன் மூலம் கிடைக்கும் நிதி மன வளர்ச்சி குன்றிய மழலைகள் காப்பகம் மெர்சி நிகேத்தன் http://www.mercyniketan.org மற்றும் பார்வை இழந்த குழந்தைகள் காப்பகமான இந்திய அசோசியேஷன் http://www.theiab.org ஆகியவற்றுக்கு அளிக்கப்படும்.
இந்த நிகழ்சிக்கான டிக்கெட்டுகள் கிடைக்குமிடங்கள்:
துபாய்: சிவ்ஸ்டார் பவன், பெருமாள் குரோசரி, மூன்லைட் ரெஸ்டாரண்ட், யம்மி ரெஸ்டாரண்ட், அமராவதி ரெஸ்டாரண்ட், சரவண பவன்
சார்ஜா: சபையர் ரெஸ்டாரண்ட், சங்கீதா ரெஸ்டாரண்ட், சரவண பவன், மெட்ராஸ் குரோசரி
அஜ்மான்: சிவ்ஸ்டார் பவன், இந்தியா பேலஸ்
இந்த டிக்கெட் வாங்குபவர்களுக்கு ஒரு அதிர்ஷடம் காத்திருக்கிறது. குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் அதிர்ஷ்டசாலிக்கு சின்னத்திரை நட்சத்திரங்களுடன் உணவு உண்ணும் வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications