ஷாப்பிங் மாலில் பள்ளிக்கூடம்: டெல்லி குழந்தைகள் குதூகலம்!

ஜூலியா கேப்ரியல் கல்வி மையம் தெற்கு டெல்லியில் உள்ள சாகேத்தில் இருக்கும் டி.எல்.எப் பிளேஸ் மாலில் தனது புதிய கிளையை நிறுவியுள்ளது.
மாலில் கல்வி மையம் அமைக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். மாலின் முதல் தளத்தில் உள்ள இதில் 6 மாதம் முதல் 16 வயது வரை உள்ள குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இங்கு பாடங்களை இசை, பேச்சு, நாடகம் ஆகியவற்றின் மூலம் கற்பிக்கின்றனர். தினமும் பள்ளி செல்ல அழும் குழந்தைகள் கூட இந்த பள்ளிக்கு செல்ல ஆசைப்படுவார்கள். ஏனென்றால், இந்த பள்ளிக்கு தினமும் செல்ல தேவையில்லை. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்றால் போதும்.
சன்டிகாரில் உள்ள மால் ஒன்றில் இதே போன்ற கல்வி மையத்தை நிறுவ பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
தற்போது செயல்படும் இந்த மையத்தில் பிரபல பேஷன் டிசைனர்களான ராகவேந்திரா ரத்தோர், ரீது பெரி, நம்ரதா ஜோஷிபுரா மற்றும் கிரிக்கட் வீரர் நிக்கி சோப்ரா ஆகியோரின் குழந்தைகள் படிக்கிறார்கள் என்று ஜெ.ஜி.சி.எல். இன் தலைவர் ஷமிலா கோலி தெரிவித்தார்.
ஜூலியா கேப்ரியல் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த கல்வி மையங்களுக்கு தற்போது உலகெங்கிலும் 7 கிளைகள் உள்ளது. சீனா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ஒவ்வொன்றிலும் ஒரு மையமும், இந்தியாவிலும், சிங்கப்பூரிலும் இரண்டு மையங்களும் உள்ளன.
தினமும் புத்தக மூட்டையை சுமந்து சுமந்து களைத்துப் போயிருக்கும் குழந்தைகளுக்கு இது இனிப்பான செய்தி.
கல்வி கமர்ஷியலாகி விட்ட நிலையில் கமர்ஷியல் வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையம் வித்தியாசமான அனுபவம்தான்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications