ஹெச்.ஐ.வி. யை அழிக்கும் பெண்களின் கருப்பை திரவம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

Womb
லண்டன்: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உலக மக்கள் ஏராளமானோர் உயிர் இழந்து கொண்டிருக்கின்றனர். இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் செய்த ஆராய்ச்சியில் பெண்களின் கருப்பை குழாயில் இருந்து வெளிவரும் திரவத்திற்கு எய்ட்ஸ் நோய் கிருமியை அழிக்கும் சக்தி உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பால் எய்ட்ஸ் நோயின் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பற்ற முடியும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஐ.நா.எய்ட்ஸ் திட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்தி வாய்ந்த மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், இதுவே முதல் தடவை என்றும் அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் அந்தோணி கூறினார்.

எனவே, எய்ட்ஸ் நோய் கிருமிகளை அழிக்க இந்த திரவத்தை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+