குவைத்தில் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 'கல்வி விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்து பரிமாற்ற நிகழ்வு'

Subscribe to Oneindia Tamil

குவைத்: குவைத்தில் கல்வி விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்து பரிமாற்ற நிகழ்வு நடைபெற்றது.

குவைத்தில் இந்திய இஸ்லாமியர்களின் கல்வி நிலை குறித்த உண்மைத் தகவல்கள், எதிர்கால உள்நாடு மற்றும் வெளிநாடு கல்வி பற்றிய ஓர் அலசல், என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? எப்போது படிக்கலாம்? ஆகியவற்றின் விரிவான விளக்கங்கள், கல்வி உதவித் தொகை குறித்த மறக்கப்பட்ட உண்மைகள் போன்றவற்றை குறித்து மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்கும், கல்வி குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கும், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) 'கல்வி விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்து பரிமாற்ற நிகழ்வு' தொடர்ந்து 2 நாட்களாக குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற்றன.

முதல் நாள் நிகழ்ச்சி:

கடந்த வியாழக்கிழமை இரவு 7:30 மணி முதல் இஷா தொழுகையைத் தொடர்ந்து இரவு 10:00 மணி வரை குவைத் ஃபஹாஹீல் பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ (உர்தூ குத்பா)' பள்ளிவாசலில் நடைபெற்றது.

சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் கல்விக் குழு செயலாளரும், திருநெல்வேலி ஷஃபி கல்வி அறக்கட்டளையின் தாளாளரும், குவைத் ஜலீப் இன்டிகிரேடட் இந்தியன் பள்ளியின் இணைப் பேராசிரியரும், சிறந்த கல்வியியல் ஆய்வாளருமான முனைவர் பேராசிரியர் எம். அப்துல் ஹமீத் M.Sc., M.Phil, B.Ed., PhD. அவர்களும், சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A. அவர்களும் சிறப்புரையாற்றினர்.

சங்கத்தின் மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு உறுப்பினர் மவ்லவீ காரீ எச்.எம். அப்துர் ரஹ்மான் மழாஹிரி அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி:

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணி முதல் இஷா தொழுகையைத் தொடர்ந்து 10:00 மணி வரை குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (உர்தூ குத்பா)' பள்ளிவாசலில் நடைபெற்றது.

சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ தலைமையில் நடைபெற்ற இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் சங்கத்தின் மூத்த கல்விக் குழு உறுப்பினரும், குவைத் யுனிவர்ஸல் அமெரிக்கன் கலா சாலையின் கல்வியியல் ஆலோசகரும், குவைத் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான ஓட்டி (பைலட்) பயிற்சியாளரும், சிறந்த மனோதத்துவ அறிஞருமான பேராசிரியர் எம். அப்துர் ரஹீம் M.A., M.Ed., QTIC, அவர்களும், சங்கத்தின் கல்விக் குழு செயலாளரும், திருநெல்வேலி ஷஃபி கல்வி அறக்கட்டளையின் தாளாளரும், குவைத் ஜலீப் இன்டிகிரேடட் இந்தியன் பள்ளியின் இணைப் பேராசிரியரும், சிறந்த கல்வியியல் ஆய்வாளருமான முனைவர் பேராசிரியர் எம். அப்துல் ஹமீத் M.Sc., M.Phil, B.Ed., PhD. அவர்களும் சிறப்புரையாற்றினார்.

சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இந்த நிகழ்ச்சிகளில் பெண்கள் உட்பட ஏறக்குறைய 150 பேர் கலந்து கொண்டனர். கல்வி குறித்து எழுப்பிய அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கமாக பதில் அளிக்கப்பட்டன. கல்வி குறித்த தகவல்களும் பார்வையாளர்களால் பரிமாறி கொள்ளப்பட்டன.

இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகளில் சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதுடன் சங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.

சங்கத்தின் இணைப் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் ஏ.கே.எஸ். அப்துல் நாஸர் வரவேற்புரையாற்றினார். சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர் நன்றியுரை வழங்கினார்.

இதில் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் திருக்குர்ஆன் விவகாரங்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் சங்கம் ஏற்பாடு செய்திருக்கும் இலவச திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் குறித்த தகவல்கள் அறிவிப்பு செய்யப்பட்டது. மேலும், விண்ணப்பப் படிவங்களும் விநியோகம் செய்யப்பட்டன.

மேலதிக விபரங்களுக்கு...
துரித சேவை அலைபேசி எண் : (+965) 97 87 24 82
அதிகாரப்பூர்வ இணையதளம் : www.k-tic.com
மின்னஞ்சல் முகவரிகள் : [email protected] / [email protected]
யாஹு குழமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group
செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+