காமன்வெல்த்தை வைத்து கார்ட்டூன் கண்காட்சி!

பிரபல கார்ட்டூன் கலைஞரான இர்பான் கான் காமன்வெல்த் குழப்பம் தொடர்பான 15 கார்ட்டூன்களை இந்த கண்காட்சியில் வைக்கவுள்ளார். ஊழல், இடிந்து விழுந்த பாலம், கடைசி நேர 'ஹலபுலா' குழப்பங்கள், களேபரங்கள் ஆகியவற்றை வைத்து கார்ட்டூனாக வரைந்து விளாசியுள்ளார்.
இதுகுறித்து இர்பான் கான் கூறுகையில், நடப்பு பிரச்சினைகளை வைத்து எனது கார்ட்டூன்களை படைக்க விரும்பினேன். அப்போது வந்தது காமன்வெல்த் தொடர்பான ஊழல்கள், குழப்பங்கள். மக்கள் பிரச்சினைகள் ஆயிரக்கணக்கில் இருக்க, இப்படி ஒரு விளையாட்டுப் போட்டிக்காக அடித்துக் கொள்ளும் அக்கிரமத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் பார்த்து இதையே எனது கார்ட்டூன் பொருளாக்கி விட்டேன்.
சாதாரண மக்களுக்கும் உண்மைகள் பட்டென புரியும் வகையில் வெளிக் காட்டுவது கார்ட்டூன்கள் மட்டுமே. எனவேதான் காமன்வெல்த் ஊழல்கள், களேபரங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கார்ட்டூன் ஓவியங்களாக்கியுள்ளேன்.
மூத்த காங்கிரஸ் தலைவர்களை இந்த கண்காட்சியை தொடங்கி வைக்க அணுகினேன். ஆனால் அவர்கள் தயாராக இல்லை. மேலும் மக்களிடம் இப்போது இருப்பது பெரும் அதிருப்தியும், காமன்வெல்த் போட்டி மீதான எதிர்ப்பு்தான்.எனவே எதிர்க்கட்சித் தரப்பில் யாரையாவது அணுகலாம் என்று நினைத்தேன். அத்வானிதான் நினைவில் வந்தார். எனவேதான் அவரை கூப்பிட்டுள்ளேன். மேலும், அவர்எனது ரசிகரும் கூட என்றார் இர்பான் கான்.
செப்டம்பர் 26ம் தேதி டெல்லி பிரஸ் கிளப்பில் இந்த கண்காட்சி தொடங்குகிறதாம்.
இப்படி காமன்வெல்த் போட்டியை வைத்து ஏகப்பட்ட களேபரங்கள் நடந்து கொண்டிருந்தாலும், 'அங்கே சிரிப்பவர் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு' என்ற பாணியில் காமன்வெல்த் போட்டிக் குழுவினர் படு கூலாக தங்களது வேலையை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications