காஞ்சியில் தமிழ் அன்னைக்கு கோயில்!

காஞ்சிபுரம் கூரம் கிராமத்தில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, தமிழ் அன்னை சிலை மாமல்லபுரத்தில் உருவாக்கப்பட்டு வருவதாக, பேரறிஞர் அண்ணா தமிழ் வளர்ச்சி மன்றத்தின தலைவர் கவிஞர் கூரம் துரை தெரிவித்துள்ளார்.
மே 27 அன்று தமிழ் அன்னை கோயிலுக்கு கரிகோல் விழா மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் என முப்பெரும் விழாவாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கவிஞர் கூரம் துரை எழுதிய 'அண்ணா அணையா விளக்கு" என்ற நூல் வெளியீட்டு விழாவும், சாதனைச் செம்மல் வண்டலூர் வ.கோ.ரங்கசாமி - தேன்மொழி இணையரின் முப்பத்தி ஒன்றாவது திருமண விழாவும் இந்நிகழ்வோடு இணைந்து நடத்தப்படுகிறது.
மாலை 3 மணியளவில் சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திலிருந்து தொடங்கும் கரிகோல் விழா ஊர்வலம் அண்ணா தெரு, சி.வி.ஆர்.தெரு, டி.கே.தம்பித்தெரு, காந்தி சிலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக பேரணி நடக்கிறது.
பேரணிக்கு தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் தலைமை தாங்குகிறார். தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், கலைப் பண்பாட்டுத்துறை மண்டல தணை இயக்குநர் முனைவர் இரா.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
பேரணியை வண்டலூர் வ.கோ.ராமசாமி துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். ஊர்வலத்தின் போது, மங்கல இசை முழக்கம், கைசிலம்பாட்டம், வில்லுப்பாட்டு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாலை 6 மணியளவில், கூரத்தாழ்வாள் கோயிலில் கவியரங்கம் நடக்கிறது. கவியரங்கிற்கு பனப்பாக்கம் கே.சுகுமார் தலைமை தாங்குகிறார். கவிஞர் சி.நீலமேகன் முன்னிலை வகிக்கிறார். கவியரங்கை வாழ்த்தி பேரறிஞர் அண்ணா தமிழ் வளர்ச்சி மன்றத் தலைவர் கவிஞர் கூரம் துரை பேசுகிறார். கோயில் அறங்காவலர் கே.வி.இராகவன், கவிப்பேரரசு அரு.அருமைநாதன், கவிஞர் திருவள்ளுவர் பச்சையப்பனார், தியாகி வி.எஸ்.துளசிங்கப்பெருமாள், இளங்கவி காஞ்சி. கோ. சரவணன் ஆகியொர் முன்னிலை வகிக்கின்றனர். முனைவர் வி.முத்து, கவிஞர் த.மாசிலாமணி ஆகியோர் கவிஞர்களுக்கு பாராட்டுச் சான்று வழங்குகிறார்.
கவிஞர் கூரம் துரை எழுதிய ;அண்ணா அணையா விளக்கு" நூலை, மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.முருகேசன் வெளியிடுகிறார். முதல் நூலை, தமிழ்நாடு மாநில பட்டு நல வாரிய உறுப்பினர் ஆர்.வி.ரஞ்சித்குமார் பெறுகிறார். வ.கோ.ரங்கசாமி - தேன்மொழி ஆகியோர் ஏற்பரை வழங்குகின்றனர். இரவு 10 மணியளவில் கிராமிய கட்டைக்கூத்து குழுவினரால் 'சந்தரி கல்யாணம்" நடக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications