பாதி வழியில் பழுதடைந்த ஊட்டி மலை ரயில்-இன்று மட்டும் ரத்து
Subscribe to Oneindia Tamil

மேட்டுப்பாளையத்திலிருந்து இன்று காலை வழக்கம் போல குன்னூருக்கு மலை ரயில் புறப்பட்டுச் சென்றது. கல்லார் அருகே ரயில் சென்றபோது திடீரென என்ஜினில் பழுது ஏற்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து பார்த்தபோது என்ஜினின் இணைப்புக் கட்டை உடைந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ரயில் தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து ரயிலில் இருந்த பயணிகளை பஸ்கள் மூலம் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
பின்னர் என்ஜினின் பழுது பார்ப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இன்று மட்டும் மலை ரயில் ஓடாது என அறிவிக்கப்பட்டது. நாளை முதல் தொடர்ந்து ரயில் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications