இந்திய எம்.பிக்களுக்குக் கிடைக்கும் சம்பளமும், எல்லையில்லாத சலுகைகளும்
டெல்லி: நமது நாட்டு எம்.பிக்கள் பெறும் சம்பளம் மற்றும் பிற சலுகைகள் குறித்து நிறையப் பேருக்குத் தெரியாது. ஆனால் தெரிந்தால் பிளந்த வாயை மூட ரொம்ப நேரமாகும்.
நமது எம்.பிக்கள் பெரும் சம்பலம் உள்ளிட்ட சலுகைகள் விவரம்...
ஒவ்வொரு எம்.பிக்கும் மாதச் சம்பளமாக ரூ. 50,000 தருகிறது அரசு (இதற்கு முன்பு ரூ. 16,000தான் வாங்கினார்கள்-கடந்த திங்கள்கிழமை முதல் இந்த புதுச் சம்பளம் வாங்கப் போகிறார்கள்).
இதுதவிர தினசரிப் படியாக ரூ. 2000, தொகுதி படியாக ரூ. 45,000, அலுவலகப் படியாக ரூ. 45,000 கிடைக்கும் -மாதந்தோறும்.
இதில் டெல்லியில் எம்.பிக்களுக்கு ஒதுக்கப்படும் பங்களா, ரயில் பயண சலுகைகள், இலவச விமானப் பயணம் ஆகியவை சேர்க்கப்படவில்லை.
ஒவ்வொரு எம்பியும் வருடத்திற்கு 34 முறை விமான பயணமாக இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் போய் வர முடியும். இதற்கு ஆண்டுதோறும் ஆகும் செலவு தோராயமாக ரூ. 5 லட்சமாகும்.
அதேசமயம், ரயில் பயணம் முழுக்க முழுக்க இலவசம். எத்தனை வாட்டி வேண்டுமானாலும் ரயிலில் போயக் கொள்ளலாம்.
இதுபோக ஆண்டுக்கு 50,000 யூனிட் மின்சாரத்தை இலவசமாக எம்.பிக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கான மாதந்திரக் கட்டணம் தோராயமாக ரூ. 1,80,00 ஆகும். இதுபோல ரூ. 40,000 மதிப்புள்ள 4000 கிலோலிட்டர் தண்ணீரை அதாவது மினரல் வாட்டரை அவர்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் (பாதுகாக்கப்பட்ட, சுகாதாரமான குடிநீர் இல்லாமல் அவதிப்படும் கிராமங்கள் நமது நாட்டில் எக்கச்சக்கம்).
அதேபோல டெல்லியிலோ அல்லது தங்களது தொகுதியிலோ, இருப்பிடத்திலிருந்து விமான நிலையம் செல்லும்போது கிலோமீட்டருக்கு 16 ரூபாய் என்ற விகிதத்தில் பெட்ரோல், டீசல் அலவன்ஸ் கிடைக்கும்.
ஒருவர் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாலே அவருக்கு வாழ்க்கை முழுவதும் பென்ஷனும் கிடைத்து விடும். முன்பு இத்தனை காலம் எம்.பியாக இருக்க வேண்டும் என கட்டுப்பாடு இருந்தது. இப்போது அது இல்லை. எம்.பி. ஆகி விட்டாலே பென்ஷன், கன்பர்ம்ட்.
சம்பளம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் ஒன்று சேர்த்து மதிப்பிட்டால் நமது நாட்டு எம்.பிக்கள் ஒரு மாதத்திற்குப் பெறுவது கிட்டத்தட்ட 2.2 லட்சம் டாலர்களாகும். இது சிங்கப்பூர் (2.1), ஜப்பான் (1.9), இத்தாலி (1.9) நாட்டு எம்.பிக்கள் பெறும் சம்பளத்தை (சம்பளம் மட்டும்தான்) விட அதிகமாகும்.
ஆனால் சம்பளத்தை மட்டும் கணக்கிட்டுப் பார்த்தால், நமக்கு முன்பு ஜப்பான் முதல் ஸ்பெயின் வரை ஏகப்பட்ட நாடுகள் உள்ளன. கடை நிலையில்தான் இந்தியா உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications