சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலில் இன்று ஆடி தபசு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் இன்று ஆடி தபசு விழா நடக்கிறது. இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலில் ஆடிதபசு விழா கடந்த 15-ம் தேதி துவங்கியது. விழா நாட்களில் அம்பாளுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் சிறப்பு ஆராதனை, தவக்கோலத்தில் கோமதி அம்மன் வீதி உலா வருதல், மாலையில் மண்டகப்படி கட்டிடங்களுக்கு எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று காலை கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து வரும் அலங்காரத்தில் அம்மன் ரதவீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று ஆடிதபசு காட்சி நடக்கிறது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு கோவில் உள் பிரகாரத்தின் மேல் பகுதியில் சுவாமி அம்மனுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. காலை 11.45 மணிக்கு கோமதி அம்மன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்திற்கு சென்றார்.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ரத வீதியுலா சென்று 6.05 மணிக்கு கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணராக காட்சி அளிக்கும் தபசு காட்சி நடக்கிறது.
இரவு 11 மணி அளவில் சுவாமி வெள்ளி யானை வாகனத்தில் சங்கரலிங்க சாமியாக கோமதியம்மைக்கு காட்சி அளிக்கும் 2வது தபசு காட்சி நடக்கிறது. நாளை (26ம் தேதி) சுவாமி, அம்மன் பட்டணபிரவேசம் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆடி தபசு விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கரன்கோவிலில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications