தமிழகத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: அமைச்சர் சுரேஷ் ராஜன்

குற்றாலத்தில் சாரல் திருவிழா நேற்று இரவு தொடங்கியது. இதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கலெக்டர் ஜெயராமன் வரவேற்புரை அளித்தார். சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் சாரல் திருவிழாவையும், அமைச்சர் பெரியகருப்பன் நிகழ்ச்சிகளையும் துவக்கி வைத்தனர். அமைச்சர் மைதீன் கான் குத்துவிளக்கேற்றினார்.
அமைச்சர் சுரேஷ் ராஜன் பேசுகையில்,
நெல்லை மாவட்டத்தில் சுற்றுலாத் துறை மூலம் கடந்த ஆண்டு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற் கட்டமாக சுற்றுலா தலங்களை கண்டறிந்து அடிப்படை வசதிகளை செய்து வருகிறோம். தமிழகம் அமைதிபூர்வமாக திகழ்வதால் தான் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு 7 கோடியே 80 லட்சம் சுற்றுலா பயணிகள் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். இதில் 23 லட்சத்து 69 ஆயிரம் பேர் வெளிநாட்டவர்கள். இந்த முன்னேற்றத்தால் தமிழக சுற்றுலாத் துறைக்கு 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. தற்போது குற்றாலம் தொடர்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் அடுத்த சாரல் திருவிழாவுக்குள் நிறைவேற்றப்படும் என்றார்.
பின்னர் கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில்,
குற்றாலத்தில் நான்கு ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. முதன்முறையாக மத்திய அரசு சுற்றுலா நிதி முலம் ரூ. 4.62 கோடி வழங்கியுள்ளது.
ஐந்தருவி, பழைய குற்றாலத்தில் பார்கிங் செய்ய இடவசதி செய்து தர வேண்டும். வனத்துறையிடம் உள்ள சிற்றருவியை பேரூராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும். ஐந்தருவி பைபாஸ் சாலையில் மரங்களை வெட்டி வீடுகளை கட்ட அனுமதிக்கக் கூடாது.
இந்த ஆண்டு சீசனில் மட்டும் 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications