இறந்த பிறகும் பெரும் பணம் ஈட்டுவோர் பட்டியலில் ஜாக்சனுக்கு முதலிடம்
Subscribe to Oneindia Tamil

மறைவுக்குப் பின்னர் மட்டும் ஜாக்சன் 275 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார். இந்த சாதனையை உயிருடன் உள்ள அல்லது இறந்த எந்த இசைக் கலைஞரும் நிகழ்த்தியதில்லை என்பது ஜாக்சனின் சிறப்பம்சமாகும்.
தனது வாழ்நாளின்போது போர்ப்ஸ் பட்டியல் எதிலும் இடம் பெற்றதில்லை ஜாக்சன். ஆனால் மரணத்திற்குப் பின்னர் முதல் முறையாக உலகின் 100 பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்றார். தற்போது மறைவுக்குப் பிறகும் பெரும் பணம் ஈட்டும் பிரபலங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
மறைவுக்குப் பின்னர் பெரும் பணம் ஈட்டிய பிரபலங்கள் வரிசையில் இதற்கு முன்பு இருந்து வந்த எல்விஸ் பிரஸ்லி, ஜான் லென்னான் ஆகியோரையும் அவர் பின்னுக்குத் தள்ளி விட்டார்.
தனது 50வது வயதில் கடந்த ஆண்டு ஜூன் 25ம் தேதி ஜாக்சன் மறைந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications