தமிழகம் முழுவதும் கோவில் ஊழியர்கள் ஸ்டிரைக்-பூஜையில் பாதிப்பில்லை
சென்னை : தமிழகம் முழுவதும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில் ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் முக்கியக் கோவில்களில் பூஜை போன்றவை பாதிக்ப்படவில்லை.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், மாநிலம் முழுவதும் 38 ஆயிரத்து 421 கோவில்கள் உள்ளன. கோவில் நிர்வாக அதிகாரி பணியில் துவங்கி, அர்ச்சனை, அபிஷேகம், சிறப்பு வழிபாடு, முடிகாணிக்கை வழங்குவதற்கான கட்டண டிக்கெட் வழங்குதல், பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தல், பக்தர்களை ஒழுங்குபடுத்துதல் என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவில் ஊழியர்களுக்கு சமீபத்தில் சம்பள உயர்வை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் அறிவித்தது. ஆனால் ஆறாவது சம்பளக் கமிஷன்படி அரசு அறிவித்த சம்பள உயர்வை விட, அறநிலையத்துறை நிர்வாகம் தங்களுக்கு குறைவான சம்பள உயர்வை வழங்கியுள்ளதாக கூறி ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசாணையின்படி 40 சதவீத சம்பள உயர்வு; சம்பள நிலுவையில் ஒரே தவணையில் வழங்குதல்; சம்பளச் செலவு உச்சவரம்பை கைவிடுதல்; தினக்கூலி மற்றும் தொகுப்பூதியம் பெறும் முழுநேரப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக்கி சம்பள விகிதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில் பணியாளர்கள் இன்று ஸ்டிரைக் செய்ய அழைப்பு விடுத்திருந்தனர்.
அதன்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கோவிலுக்குள்ளேயே இருப்பது, அதேசமயம், அர்ச்சனை, அபிஷேக டிக்கெட் தருவது, வருகைக் கட்டண டிக்கெட் தருவது போன்றவற்றில் ஈடுபடுவதில்லை என்று அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று ஸ்டிரைக் தொடங்கியது. இருப்பினும் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி முருகன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ளிட்ட அனைத்து முக்கியக் கோவில்களிலும் பூஜைகள் பாதிக்கப்படவில்லை.
பக்தர்களுக்கு அர்ச்சனை, அபிஷேக டிக்கெட்களை விற்பதற்கு மாற்று ஏற்பாடுகளை கோவில் நிர்வாகங்கள் செய்திருந்தன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications