துபாய் ஈமான் சங்கத்தின் 35 ஆம் ஆண்டு விழா

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) 35 ஆம் ஆண்டு விழா ஐக்கிய அரபு அமீரகத்தின் 39 ஆவது தேசிய தினமான டிசம்பர் 2ம் தேதி நடைபெறுகிறது.

02.12.2010 வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை கவானிஜ் சாலையில் அமைந்துள்ள முஷ்ரிஃப் பூங்காவில் இந்த விழா நடைபெற இருப்பதாக பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் கல்வியாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர். பெரியவர்களுக்கும், சிறுவர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன. நிகழ்வில் பங்கேற்க வருவோருக்கு பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் குடும்பத்தினருடன் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன் அனுமதிச் சீட்டு பெறுவோர் மட்டுமே நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

முன் அனுமதிச் சீட்டுகளை கீழக்கரை ஹமீது யாசின் 050 475 3052 / மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ் 050 77 52 737 / முதுவை ஹிதாயத் 050 51 96 433 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பெறலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+