பீருக்கே டெல்லி குடிகாரர்கள் மத்தியில் முதலிடம்

டெல்லி அரசின் புள்ளிவிவரம் இதைத் தெரிவிக்கிறது. டெல்லி மதுப் பிரியர்கள் மத்தியில் பீருக்கே முதலிடமாம். அடுத்த இடம் ஒயினுக்குக் கிடைக்கிறது. பிற மது வகைகள் அப்புறம்தான்.
டெல்லியில் 2009-10ம் ஆண்டில் மொத்தம் 11.78 கோடி பீர் பாட்டில்கள் விற்பனையாகியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மது வகைகளின் விற்பனை இதே காலகட்டத்தில் 9.65 கோடியாக இருந்தது.
உள்ளூர் மது வகையின் விற்பனையும் பிரமாதமாக இருந்துள்ளதுடெல்லியில், இதே காலகட்டத்தில் நாட்டுச் சரக்கின் விற்பனை 6.81 கோடி பாட்டில்களாக இருந்துள்ளது.
2008-09 காலகட்டத்தில் டெல்லி மக்கள் 9.74 கோடி பீர் பாட்டில்களை பயன்படுத்தியுள்ளனர். இதே காலகட்டத்தில் விற்பனையான இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மது வகைகளின் விற்பனை அளவு 8.39 கோடி பாட்டில்களாகும்.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் 4ம் தேதி வரையிலான கால கட்டத்தில் டெல்லி அரசு கலால் வரியாக மட்டும் ரூ. 1,103 கோடியை மது விற்பனை மூலம் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ. 878.44 கோடியாக இருந்தது.
நடப்பு நிதியாண்டில் ரூ. 15,582 கோடி அளவுக்கு மது விற்பனை மூலம் வருவாய் ஈட்ட டெல்லி அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications
