தடுப்புச் சுவரை அகற்றக் கோரி கன்னடியன் கால்வாயை முற்றுகையிட்ட விவசாயிகள்
அம்பாசமுத்திரம்: கன்னடியன் கால்வாயில் புதிதாக கட்டப்பட்ட தடுப்புச் சுவரை அகற்றக் கோரி விவசாயிகள் கல்லிடைக்குறிச்சியில் உள்ள கால்வாயை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கல்லிடைக்குறிச்சியில் உள்ள கன்னடியன் கால்வாயில் இருந்து தடுப்புச் சுவர் சுமார் ஒன்றரை மீட்டர் உயர்த்தி கட்டப்பட்டது. இதனால் ஸ்ரீவைகுண்டம் கால்வாய்க்கு தண்ணீர் குறைவாக வருகிறது. இது விவசாயத்திற்கு போதுமானதாக இல்லை.
தடுப்புச் சுவர் உயர்த்துவதற்கு முன் கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டால் 3 நாட்களுக்குள் ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு தண்ணீர் வந்துவிடும். ஆனால் தற்போது 15 நாட்களாகியும் ஸ்ரீவைகுண்டம் கால்வாய்க்கு தண்ணீர் குறைவாகவே வருகிறது. எனவே உயர்த்தப்பட்ட தடுப்புச் சுவர் பகுதியை அகற்ற வேண்டும் எனக் கோரி நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 68 சங்க விவசாயிகள் கல்லிடைக்குறிச்சியில் உள்ள கன்னடியன் கால்வாயை முற்றுகையிட்டனர்.
இது குறித்து தாமிரபரணி வடிநில திட்டக்குழுத் தலைவர் உதய சூரியன் கூறுகையில்,
கல்லிடைக்குறிச்சியில் உள்ள கன்னடியன் கால்வாயில் உயர்த்தி கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவரால் தூத்துக்குடி மாவட்ட விவசாய பணிகளுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் சுமார் 78 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்புச் சுவரை உயர்த்துவதற்கு முன் யாரிடமும் கருத்து கேட்கவில்லை. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய ஒன்றாகும். இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications