சீனாவின் அதிவேக ரயில்... மணிக்கு 416.6 கிமீ வேக பாய்ச்சல்!
பெய்ஜிங்: மணிக்கு 416.6 கிமீ வேகத்தில் பறக்கும் அதிவேக ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே பெய்ஜிங்- தியான்ஷின் நகரங்களுக்கிடையே அதிவேக ரெயிலை இயக்கி வந்தது சீனா. கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் 24-ந்தேதி இந்த ரயில் இயக்கப்பட்டது. மணிக்கு 394.3 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட இந்த ரயில்தான் உலகின் அதிவேக ரயில் என்று புகழப்பட்டது. தற்போது, அதை விட அதிக வேகமாக இயங்க கூடிய ரெயிலை சீனா உருவாக்கியுள்ளது.
இந்த ரெயில் மூலம் ஷாங்காய்- ஹாங்ஹீ நகரங்களுக்கு இடையே பரிசோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது மணிக்கு 416.6 கி.மீட்டர் மின்னல் வேகத்தில் பறந்து சாதனை படைத்தது.
சோதனை ஓட்டத்தின்போது, இந்த ரெயில் மணிக்கு 350 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் அளவு வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இது ஷாங்காய்- ஹாங்ஹீ நகரங்களுக்கு இடையே 202 கி.மீட்டர் தூரத்தை நாற்பதே நிமிடங்களில் கடந்துவிட்டது.
இதற்கு முன்பு இந்த தூரத்தை ரெயில்கள் 2 மணி நேரத்தில் கடந்து சென்றன. தற்போது மிக குறைந்த நேரத்தில் சென்றதன் மூலம் உலகிலேயே அதிவேக விரைவு ரெயில் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
இதன்மூலம் நவீன ரெயில்வே தொழில் நுட்பத்தை சீனா பெற்றுவிட்டது நிரூபணமாகியுள்ளது என்று சீன ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரைவில் பயணிகளின் பயன்பாட்டுக்காக இந்த கொண்டுவரப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications