இன்பாக்ஸ் 1305 அமைப்பின் 2வது ஆண்டு விழா

Subscribe to Oneindia Tamil

Inbox1305
சென்னை: இன்பாக்ஸ் 1305அமைப்பின் 2வது ஆண்டு விழா நாளை மாலை நடைபெறுகிறது.

திரைப்பட இயக்குநர் கெளதம் மேனன், பாடகி அருணா சாய்ராம் ஆகியோர் 2வது ஆண்டு விழா சிறப்பு மலரை வெளியிடுகின்றனர்.

அண்ணா சாலையில் உள்ள ரெய்ன்ட்ரீ ஹோட்டலில் மாலை 6.45 மணிக்கு விழா தொடங்குகிறது.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பான அமைப்புதான் இன்பாக்ஸ் 1305. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பாக மை பிளானட் அன்ட் ஐ என்ற பெயரில் போட்டிகளும் நடத்தப்பட்டன.

ஜூலை 23ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் இதில் வெற்றி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் நடுவர்களாக கலந்து கொண்டு இவர்களைத் தேர்வு செய்தனர்.

போட்டோ ப்ரீஸ் விருது வெங்கட்ராம், சுந்தர் ஆகியோருக்குக் கிடைத்துள்ளது. எகோ நோட்ஸ் விருது (சிறந்த சிறுகதை, கட்டுரை) எழுத்தாளர் ஜானகி லெனினுக்கும், சுற்றுச்சூழல் நாயகன் (Environmental Heroes) விருது எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் எம்.பி.நிர்மலுக்கும் கிடைத்துள்ளது.

சோல் புட் (Soul Food) விருது எழுத்தாளர் சபீதா ராதாகிருஷ்ணா மற்றும் ரெய்ன்ட்ரீ ஹோட்டலின் தலைமை சமையல் நிபுணர் வினோத்துக்கும் கிடைத்துள்ளது.

க்ரீன் பேஷன் விருது பிரபல டிசைனர் ரெஹானே மற்றும் ஸ்டுடியோ சாக்ஸின் சபீதாவுக்கும் கிடைத்துள்ளது.

நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் அனைவருக்கும் பரிசுகள் அளிக்கப்பட்டு கெளரவிக்கப்படுவர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கிருத்திகா உதயநிதி ஏற்பாடு செய்துள்ளார்.

நாளைய நிகழ்ச்ச்சியில் மாலடோவ் காக்டெய்ல், கிரீன் பேஷன் ஷோ ஆகியவை நடைபெறுகிறது. கிரீன் பேஷன் ஷோ நிகழ்ச்சியில் ஆர்கானிக் உடைகள் அணிந்து சென்னை, மும்பையைச் சேர்ந்த மாடல் அழகிகள் நடைபோடவுள்ளனர். இதில் நடிகர்கள் ஆர்யா, சிவா, வீராங்கனை தீபிகா பல்லிகல் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

மேலும் விவரம் அறிய 9790988815 என்ற எண்ணிலும், [email protected] என்ற இமெயிலிலும் தொடர்பு கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+